தமிழ் සිංහල English
Breaking News

ஒரு நாட்டில் ஒரு சட்டமே இருக்க வேண்டும் .!

ஒரு நாட்டுக்கு ஒரு சட்டம் மட்டுமே இருக்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தான் ஜனாதிபதியாக வந்தபின்னர் அதைச் செயற்படுத்திக் காட்டுவேன் எனவும் அவர் கர்ஜித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது மாநாட்டில்  உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் தொடர்பான எண்ணக்கருவே ஒரு நாகரிக சமூகத்தின் அடித்தளமாகும் என்று சொன்னால் அது தவறாகாது.

சட்டத்தின் நீதியான ஆட்சிதான் ஜனநாயகத்தின் பொற்காலம் ஆகும். மக்களின் நலனுக்காகவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும் இது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. ஒரு நாட்டுக்குள் இருவேறு சட்டங்கள் இருக்கக் கூடாது.

சட்டம் சகலருக்கும் சமனாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் எப்போதும் சட்டத்தை மதிப்பவர்களாக மாற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் சட்டரீதியாகக் கூட அதிகாரம் அற்றவர்களாக மாறக்கூடிய சூழல் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts