தமிழ் සිංහල English
Breaking News

தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கும் மனநிலையில் இல்லை.!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கும் மனநிலையில் இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக
செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்ற மனநிலையிலேயே தற்போது மக்கள் உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என அனைவருமே தங்களை ஏமற்றிவிட்டனர் என்ற மனநிலையிலேயே அவர்கள் உள்ளனர்.

இதன் காரணமாக யாரையும் நம்ப முடியாதென்ற முடிவிலேயே அவர்கள் இருக்கின்றனர்.

எனவே எதிர்வரும் தேர்தலில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கோட்டாவிற்கு வாக்களிக்க தமிழ் மக்கள் முன்வரமாட்டார்கள்.

அதேபோல ஐ.தே.க.வில் வேட்பாளராக களமிறக்கப்படுபவர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார்களென்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

எனவே,தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினால் மாத்திரமே அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this post:

Recent Posts