தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதியுடன் இரகசியமாக பேசியவர்களிற்கு என்ன நடவடிக்கை?:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஐ.தே.கவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க.

அப்படியான பேச்சு இடம்பெற்றிருந்தால் அது கட்சிக்கும், ஆதரவாளர்களிற்கும் இழைக்கப்படும் அநீதியென அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான யோசனையை முன்வைப்பது தொடர்பில் கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஐ.தே.கவின் செயற்குழு அல்லது நாடாளுமன்றகுழுவின் அனுமதியின்றி அந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து உங்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தால் அந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றியிருந்த தரப்பினருக்கு எதிராக கட்சியின் விதிமுறைகளிற்கு அமைய எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

இரண்டு தசாப்தங்களின் பின்னர் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தலை வெற்றிகொள்வதற்கான சூழ்நிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில் இவ்வாறானதொரு யோசனை முன்வைக்கப்படுமாக இருந்தால் அது கட்சிக்கும் ஆதரவாளர்களிற்கும் இழைக்கும் துரோகமான செயற்பாடாகும். இது தொடர்பாக உங்களின் பதிலை மிக விரைவில் அல்லது இந்த ஒரு வாரகாலப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியுமென நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts