தமிழ் සිංහල English
Breaking News

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.தே. கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்…!!!

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட அனைவருக்குக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே சஜித் பிரேமதாச பிரசாரங்களைச் செய்வது கட்சியின் தலைமைத்துவக் கட்டளைகளை மீறிய செயலாகவே அமைந்துள்ளதால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசமிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார் .

அதேபோல் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சில தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றமை கட்சியின் விதிமுறைகளுக்கு அப்பாலான செயலாகவே கருத்தப்படுகின்றது.

ஆகவே அவரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இப்போதே கட்சியை நாசமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிலர் குற்றம்சுமத்தி வருகின்றனர்
என்றும் அவர் தெரிவித்தார்.

Share this post:

Recent Posts