தமிழ் සිංහල English
Breaking News

ஐ.தே.க தலைவர்களுக்கு அவசர அழைப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் குறித்து, கலந்துரையாடுவதற்கு, நாளை (30) அலரிமாளிகைக்கு வருகை தருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அடுத்த சில மணிநேரங்களுக்குள் எந்தவிதமான மோதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று சஜித் தரப்பு எம்.பிக்களிடம், அமைச்சர் மலிக் சமரவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவெளை, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரப்பட்ட மனுவில், ஐதேக எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (28)தொடங்கியது.

77 ஐதேக எம்.பி.க்களில், சுமார் 40 பேர் இதுவரையில் கையெழுத்திட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனுவில் கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டாரா, கயந்த கருணாதிலக, மங்கள சமரவீர, சந்திராணி பண்டார, ரவீந்திர சமரவீர, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts