தமிழ் සිංහල English
Breaking News

அக்டோபர் 14ம் திகதி வரை பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம் !

பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் மாதம் 14-ம் திகதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது.

வரும் அக்டோபர் 31-ம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என சமீபத்தில் பொறுப்பேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, அக்டோபர் மாதம் 14-ம் திகதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி எலிசபெத்துக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று ராணி எலிசபெத், பிரிட்டன் பாராளுமன்றத்தை அக்டோபர் 14-ம் திகதி வரை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share this post:

Recent Posts