தமிழ் සිංහල English
Breaking News

கடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும்.!

எப்போதாவது கடலை சாப்பிட்டாலே பல நன்மைகள் இருக்கும். ஆனால், தினமும் 5 முதல் 10 கடலை சாப்பிட்டால் இவற்றின் பலன் இரட்டிப்பாகி விடும்.

மற்ற உணவு பொருட்களை போன்றே நிலக்கடலையிலும் பல சத்துக்கள் உள்ளன.

கடலை பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். கிட்டத்தட்ட 1½ லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக்கொள்வோர் நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.

தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சி குழு கண்டறிந்து உள்ளது. இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து அது நம்மை காத்துக் கொள்ளுமாம்.

சீனர்கள் தங்களது உணவில் தினமும் கடலையை சேர்த்துக் கொள்கிறார்கள்.

வெறும் கடலை அல்லது கடலையால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் உணவு பொருட்களை தினமும் எடுத்துக் கொள்வார்களாம். இதுதான் சீனர்கள் நீண்ட காலம் நோயின்றி வாழும் ரகசியமாம்.

சுவாச நோய்கள், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பாதிப்புகள் போன்றவை வரவிடாமல் கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் தடுக்கிறது.

கடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதற்காக கடலையை அள்ளி அள்ளி சாப்பிடக்கூடாது.

தினமும் 5 முதல் 10 கடலையே மிகச்சிறந்த அளவு என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதாவது 10 கிராம் அளவு கடலையை சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பலன் கிடைக்காதாம்.

பலருக்கு இது ஆச்சரியமான தகவலாக தான் இருக்கும். ஏனென்றால், கடலை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறதாம்.

குறிப்பாக ரத்த நாளங்களில் ஏற்பட கூடிய நோய்களை இவை தடுக்கிறது. மேலும், மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும் இவை காக்கிறதாம். பொதுவாகவே ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் சற்றே வேறுபட்டிற்கும்.

அதனால், சாப்பிட கூடிய உணவு பொருட்கள் வெவ்வேறு விதத்தில் அவர்களின் உடலுக்கு நலனை தரும். ஆனால், தினமும் கடலை சாப்பிடுவதால் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் சம அளவில் இதன் பயன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பல ஆராய்ச்சியில் கூறுவது படி, கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே ஏற்படுகிறது. 10 கிராம் அளவிற்கு அதிகமாக இதனை எடுத்து கொள்வது உகந்தது அல்ல.

எனவே, நீங்களும் கடலை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேணலாம்.

Share this post:

Recent Posts