தமிழ் සිංහල English
Breaking News

ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும்.!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார்.

உலகத் தலைவர்கள் பங்குபெறும் 45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை  நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் முதல்வர் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியபோது, ரஷ்யாவை இந்த மாநாட்டில் பங்குபெறச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், மீண்டும் இந்த மாநாட்டை ஜி8 மாநாடாக நடத்தவும் நான் ஆதரவளிப்பேன், என்றார்.  அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில், ரஷ்யா அதிபர் புதின் தந்திரமாக செயல்பட்டதால், ரஷ்யா இந்த ஜி8 குழு அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது என்பதையும் தெரிவித்தார்.

Share this post:

Recent Posts