தமிழ் සිංහල English
Breaking News

இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ?

ஹாலிவுட் திரைப்பட நடிகர் ராக் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்திருக்கும் சம்பவம் ராக் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரெஸ்ட்லிங் ஆட்டம் பார்த்த 90ஸ் கிட்ஸ்களால் ராக் என்னும் பெயரை மறக்க முடியாது. சிறந்த ரெஸ்ட்லிங் சாம்பியனான “ராக்”கின் உண்மை பெயர் ட்வெய்ன் ஜான்சன். பின்னாட்களில் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியதும் தனது உண்மை பெயரையே சூட்டிக்கொண்டார் ட்வெய்ன் ஜான்சன்.

இவர் 1997லேயே டேனி கார்சியா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் 2007ல் கேம் பிளான் என்னும் படத்தில் நடித்த ட்வெய்ன் ஜான்சன் லாரன் ஹஷியான் என்னும் பெண் மீது காதல் கொண்டார். இதனால் 2008ல் முறைப்படி தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக லாடன் ஷியானோடு கொண்டிருந்த காதலின் பலனாக ஏற்கனவே இருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இருவரும் நேற்று முந்தினம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ட்வெய்ன். ஹவாயில் காதல் தம்பதியினர் செய்து கொண்ட காதல் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு இதுவரை 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.

ட்வெய்ன் ஜான்சனுக்கு இந்தியாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் அவர்களும் ட்வெய்னுக்கு மகிழ்ச்சியோடு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் 10 பேர் வந்தாலும் துவம்சம் செய்துவிடும் இரும்பு மனிதராக வலம் வருபவர் ட்வெய்ன். அவருக்குள்ளும் ஒரு காதல் மலர்ந்திருப்பதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

Share this post:

Recent Posts