தமிழ் සිංහල English
Breaking News

பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் ஆர்யா!

நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நான் கடவுள், ராஜா ராணி, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தற்போது மகாமுனி, டெடி, காப்பான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ஆர்யா ஒரு சைக்கிளிங் ஆர்வலர். ஆர்யா பல இடங்களுக்கு சைக்கிளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவரும் நடிகர் சந்தானமும் ஞாயிறு தோறும் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை சைக்கிளிலேயே சென்று திரும்புவது வழக்கம். நடிகர் சங்க தேர்தலின் போது கூட நடிகர் ஆர்யா தனது வாக்கினை பதிவு செய்வதற்காக சைக்கிளில் தான் வந்தார்.

தனது ரசிகர்களையும் டுவிட்டர் மூலமாக சைக்கிளிங் செய்ய ஊக்குவித்து வருகிறார். அவர் சைக்கிள் ரைடராக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் நாட்டில் ஒரு நீண்ட தூர சைக்கிள் போட்டி நடக்க இருக்கிறது.

111

 இப்போட்டியில் பாரிஸ் பிரெஸ்ட் பாரிஸ் எனும் மாபெரும் சைக்கிள் போட்டியில் 1200 கிலோமீட்டர் தூரத்தை ஒரு அணியாக கடக்க வேண்டும். இம்மாதம் நடைபெறும் இப்போட்டியில் ஆர்யாவின் அணி கலந்து கொள்ள இருக்கிறது.

இப்போட்டியில் கலந்து கொள்ள போகும் ஆர்யாவின் அணிக்கான ஜெர்சியை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்தார்.

ஆர்யா அணி சிறப்பாக சைக்கிள் ரைடு செய்து வெற்றிபெற தனது வாழ்த்தினை தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ந்தேதி வரை நடைபெறும் இந்த சைக்கிள் போட்டியில் சுமார் 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Share this post:

Recent Posts