தமிழ் සිංහල English
Breaking News

மொட்டுக் கட்சியின் கூட்டத்தில் பங்குபற்றிய ஸ்ரீ.சு.க.உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ.சு.க.உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது “கட்சியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கம் முக்கியமானது.

ஒரு கட்சியில் நாடாளுமன்றத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டு இன்னுமொரு கட்சிக்காக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகையால் அத்தகையோருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குச் சென்றுள்ள அத்தனை பேருடைய நாடாளுமன்ற உறுப்புரிமையை எடுத்து  எமது கட்சியிலுள்ள ஏனையவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்.

குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டமைக்காக பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று கலந்துகொண்டதைப்போன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் யாராவது எங்களது கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் என்ன நடத்திருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள்” என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts