தமிழ் සිංහල English
Breaking News

புத்தளம் கொண்டுவரப்பட்ட கொழும்புக் குப்பைகள்.!

புத்தளம் சேராக்குளி பிரதேசத்தில் மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு உத்தேச குப்பைத் தட்டும் திட்டத்திற்கு எதிராக சகல இனங்களையும் சேர்ந்த புத்தளம் பிரதேச மக்கள் இரண்டு வருடங்களுக்கு மேலோக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் குப்பைத் திட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ரிட் மணு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலைமையில், இன்று மாலை கொழும்பிலிருந்து பெருந் தொகையான வாகனங்களில் குப்பைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவை எவ்விதமான சூழல் ஒழுங்குவிதிகளையும் பின்பற்றாத நிலையில், தரம்பிரிக்கப்படாத குப்பைகளாகக் காணப்பட்டன. மேலும் சீல் செய்யப்படாது வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த குப்பைகளிலிருந்து கழிவு திரவங்கள் வழிந்தோடியதுடன் துர்நாற்றம் வீசக்கூடியதாகக் காணப்பட்டன.

புத்தளம் வேப்பமடு பிரதேசத்தில் வாகனங்களை பொதுமக்கள் நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புகைப்படங்கள் – ஹஸ்னி அஹ்மத்

Share this post:

Recent Posts