தமிழ் සිංහල English
Breaking News

வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை காக்கப்படும்.!

வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனத் தெரிவித்த சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை காக்கப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குலத்தை புனரமைக்க கோரிய அனுமதியை நான் வழங்கியுள்ளேன். ஏப்ரல் மாதமே அதற்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்து குறித்த ஜனாதிபதியின் கூட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான் புறம்பாக நாற்பது மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளேன். மேலதிமாக  தேவைப்படும்  நிதியும் வழங்க முடியும்.

அதேபோல் வவுனியாவில் சிங்கள மக்களை குடியேற்றும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. கச்சல் சமணலகுலத்தை புனரமைக்கும் நடவடிக்கை மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை வனப்பாதுகாப்பு பகுதி இதில் மக்களை குடியேற்ற முடியாது. எந்த மாவட்டத்திலும் இன ரீதியிலான விகிதாசாரத்தை  மாற்றியமைக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Share this post:

Recent Posts