தமிழ் සිංහල English
Breaking News

சாய்ந்தமருது விடயத்தில் இழுத்தடிப்பிக்கு இனியும் இடமில்லை என்கிறார் யஹ்யாகான்….!!!

சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கை
நிறைவேற்றப்படுவதற்கான சந்தர்ப்பம் கனிந்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் இதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி இம்மக்களின் மனங்களை நோகடிப்பதற்கான முன்னெடுப்புக்களை சிலர் மேற்க்கொண்டு வருகின்றனர். இருந்த போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சாய்ந்தமருது பிரிப்பு விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கின்றார். அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் குறித்த பிரச்சினைக்கு மிக விரைவாக தீர்வை வழங்க பல்வேறு எத்தனிப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார். என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் சமூக சிந்தனையாளருமான ஏ.சி.யஹ்யாகான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதற்கு இப்போதுள்ள அரசியல் நிலவரம் சாதகமாக உள்ளதாக தெரிவித்துள்ள ஏ.சி.யஹ்யாகான்,
இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரூடாக தீர்த்துவைக்க சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முன்வரவேண்டும் என்றும் இதனை வைத்து அரசியல் செய்ய முற்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது மற்றும் கல்முனை விடயங்களுக்கு தடையாக யார் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர் என்றும் அவர்களை மக்கள் ஓரம்கட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது விடயமாக அந்த ஊரின் பள்ளிவாசல் நிர்வாகம் எடுக்கும் அத்தனை செயற்பாடுகளுக்கும் தான் உறுதுணையாக இருக்கப்போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டங்களில் குரல் எழுப்பிவருவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கால எல்லைக்குள் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அதற்கு எதிராகவுள்ள அதனை துரோகிகளையும் பகிரங்கப்படுத்தவுள்ளதாகவும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts