தமிழ் සිංහල English
Breaking News

சஜித்தின் பதிலால் தடுமாறிய ரணில்!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையே அலரிமாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவின்றி முடிவடைந்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய மற்றும் மிகப்பெரிய அரசியற் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமக்கு நோக்கம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்க அதற்கான அவசியம் தமக்கும் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் நேருக்கு நேர் முகத்திற்கு முகமாக கூறிவிட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தையை தொடங்கி தனது நிலைப்பாட்டை தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதன் பதிலை சஜித் பிரேமதாஸவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில் தனது நிலைப்பாட்டிலிருந்து விட்டுக்கொடுத்து செல்ல தனக்கு இயலாது என்பதை உறுதியாக தெரிவித்திருக்கும் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையும் பிரதமரிடம் ஆணித்தரமாக கூறி விட்டார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய முன்னணி தலையீடு செய்து அமைக்கப்படவுள்ள புதிய அரசியற் கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக இதன்போது சஜித் பிரேமதாஸ, பிரதமர் ரணிலிடம் உறுதியளித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸ தனது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெளிவுபடுத்திய பின்னர், அதற்கான பதிலை அளிக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மௌனம் காத்துள்ளார்.

15 நிமிடங்கள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்திருக்கிறது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதற்கு பதில் எப்போது என்பது தொடர் கதையாக மாறியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிக்கின்றார்கள்.

Share this post:

Recent Posts