தமிழ் සිංහල English
Breaking News

காஷ்மீர் பிரச்சனையை நாம் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் ,.!

இத்தனை ஆண்டுகள் தொடர்ந்த தாக்குதல் ,
இன்னும் அதிகபடுத்தி தாக்குதலை காஷ்மீர் மக்கள் மீது இந்தியா அரசு தொடுக்கும் ,
இதன் விளைவு காஷ்மீர் மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் , புல்வாமா போன்று பல தாக்குதல் நடைபெறும் ,
அப்படி நடக்கும் பட்சத்தில் அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று நம் (பாகிஸ்தான்) மீது எல்லை மீறி இந்தியா தாக்குதல் நடத்த முயற்சிக்கும் ,
அதற்கு நாமும் பதிலடி கொடுப்போம்
அப்படி நடக்கும் பட்சத்தில் ,
இரண்டு முடிவுகள் கிடைக்கும்
ஒன்று நாம் அந்த போரில் வெல்லுவோம் அல்லது தொற்று போவோம் ,
அப்படி நடந்தாலும் நமக்கு இரண்டு வழிகள் இருக்கும் ,
1) பஹதூர்ஜாஃபர் போன்று ஆயுதங்களை கிழே வைத்து சரண் அடைய வேண்டும் அல்லது
2) போர் களத்தில் தனது உயிரை மாய்த்து கொண்ட மாவீரன் திப்பு சுல்தான் போன்று போரிட்டு உயிர் விட வேண்டும் ,
நிச்சயமாக எமது சமூகத்தை நான் அறிவேன் ,
இது முஹம்மது ( ஸல்) அவர்களின் உம்மத் பூமியில் வாழ்வதை விட அல்லாஹ்வின் பாதையில் ஷஹித் ஆவதையே சிறந்ததாக நாம் நம்பிக்கை கொண்டு உள்ளோம்….

அது மட்டுமல்ல ,
வெற்றி – தோல்வி கிடைக்காமல் போர் தொடர்ந்தால் ,
நிச்சயமாக அணு-ஆயூதங்கள் பயன்படுத்த படும் , விளைவு இரு நாடுகளில் அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவார்கள் ,
அப்பாவி மக்கள் கொல்ல படுவதை நமது தீன் அனுமதிக்க வில்லை ,
ஆகையால் அப்பாவி மக்கள் கொல்ல பட போவதை நாம் தடுக்க வேண்டும் ,

இந்தியாவுடன் பேச்சு வார்த்தையால்
நம்மால் சுமூகம்காண இயலாது ,
காரணம் பிஜேபி அரசின் தாய் கழகமான ஆர்-எஸ்-எஸ்யின் சித்தாந்தம் அடிப்படையில் அவர்கள் செயல் படுகிறார்கள் ,
அவர்களின் சித்தாந்த்தின் அடிப்படையில் பிறப்பால் அவர்கள் உயர்ந்தவர்கள் ,
நாம் ( முஸ்லிம்கள் )கீழ் ஆனவர்கள் என்கிறார்கள் ,
நமது நிலை – நமது சித்தாந்த அடிப்படையில் பிறப்பால் அனைவரும் சமம்மானவர்கள்

இதை அவர்களின் ஒவ்வொரு சமாதான பேச்சு வார்த்தையில் நம்மால் உணர முடிகிறது ஆகையால் தான் எனது அமெரிக்கா பயணத்தின் போது சமாதான பேச்சு வார்த்தை நடத்த டிரம்புக்கு அழைப்பு கொடுத்தேன்

எதற்கும் இந்தியா செவி சாய்க்க விரும்பவில்லை , முஸ்லிம்களை தாழ்வானவர்கள் என்ற அவர்களின் சித்தாந்த அடிப்படையிலான அவர்களின் செயல்பாடுகள் , நிச்சயம் அணு ஆயுத போர்ராக மாற்றி , அப்பாவி மக்களின் உயிரை வாங்கி விடும் ,

இது நடக்காமல் அப்பாவி மக்களை காத்து , மனிதநேயத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது ,
ஆகையால் காஷ்மீர் பிரச்சனையை நாம் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் , ஐநா மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அதுமட்டுமின்றி அனைத்து அரபு நாட்டு அதிபர் மற்றும் உலகின் அனைத்து முஸ்லிம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ….

(பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் )

Share this post:

Recent Posts