தமிழ் සිංහල English
Breaking News

31 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிப்பு!

சூரிய மண்டலத்திற்கு அப்பால், 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.

சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ் என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள TOI 270 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது.

இதுவரை 21 புதிய கோள்களை டெஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில், 3 புதிய கோள்களை தற்போது டெஸ் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதில் ஒன்று 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், அதற்கு GJ 357d என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியை போன்ற உருவத்தை உடைய அந்தக் கோளில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. அந்த கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share this post:

Recent Posts