தமிழ் සිංහල English
Breaking News

ரிஷாத்திடம் துப்பாக்கி கேட்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!

வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் எமக்கும் தாருங்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டிருந்தார்.

இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தில் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட்கன்கள் மீள எடுக்கப்பட்டமையினால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அவர்களுக்கு மீண்டும் சொட்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என ரிசாட் பதியுர்தீன் பொலிஸாரிடம் கேட்டபோது பாதுகாப்பு அமைச்சில் பெறவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது என தெரிவித்த நிலையில், வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ் விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லம் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts