தமிழ் සිංහල English
Breaking News

ரணிலுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில் நாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்த தீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்தார்.

நேற்று (27) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத் திட்டத்தில் 25 இலட்சம் ரூபாவிற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறக்கும் போது முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் சில கோரிக்கைகள் நிறைவற்றப்படாமல் இருப்பதனால் இவ் விடயங்கள் தொடர்பாக பிரதமரை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (இன்று, 28) மாலை அலரி மாலிகையில் சந்திக்க இருக்கின்றோம்.

இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லை பிரச்சினை, தோப்பூர் உள்ளுராட்சி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம். இவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் பிரதமருடன் பேசவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை வட்டார உறுப்பினர் ஐ.எல். பதுர்தீனின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானாவினால் கம்பரலிய வேலைத்திட்டத்தில் ரான்போமர் குறுக்கு வீதிக்கு வடிகானுக்கும் வீதிக்குமாக 20 இலட்சம் ரூபாவும் மீராவோடை ஆற்றங்கரை வீதிக்கு கொங்ரீட் இடுவதற்காக 5 இலட்சம் ரூபாவும் ஒதுபக்கப்பட்டு அதற்கான வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Share this post:

Recent Posts