தமிழ் සිංහල English
Breaking News

“படித்த அதிகாரிகளின் நடைமுறை நுண்ணறிவு கேள்விக்குரியது”.!

பதுளை எலத்தொட்ட மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு எந்த செலவுமில்லாமல் தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி. அதிகாரிகள் நடைமுறைரீதியாக சிந்தித்தால் இது சாத்தியமாகும் என்றார்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

ஹேஷா விதானகே எம்.பி எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர், 22.3 மில்லியன் ரூபாய் செலவாகும் திட்டத்தை பரிந்துரைத்துள்ளதாகவும், திட்டத்திற்கு சீன எக்சிம் வங்கி கடன் வழங்கும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் உரையாற்றும்போதே, சமிந்த விஜேசிரி மேற்கடி கருத்தை தெரிவித்தார்.

100 குடும்பங்கள் வசிக்கும் எல்லத்தோட்டாவிலிருந்து 50 மீ தொலைவில் பண்டாரவளை நீர் வழங்கல் வாரியத்தின் நீர் பம்ப் ஹவுஸ் இருப்பதாக  விஜேசிறி தெரிவித்தார். பம்ப் ஹவுஸிலிருந்து தண்ணீர் வழங்குவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முடியும். இதற்கு 50 மீ நீளமுள்ள குழாய் மட்டுமே தேவை என்று அவர் கூறினார்.

“படித்த அதிகாரிகளின் நடைமுறை நுண்ணறிவு கேள்விக்குரியது” என்று எம்.பி. விஜேசிரி கூறினார்.

இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டால் மட்டுமே, நான் ஒரு அரசாங்க எம்.பியாக அந்த மக்களை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

Share this post:

Recent Posts