தமிழ் සිංහල English
Breaking News

உலகில் மேலை நாடுகள் 5ஜி பாதகமானது.!

உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற-  தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G) அடுத்த வருட நடுப்பகுதியில்,  பல நாடுகளிலும் ஒரே முறையில் நடைமுறைக்கு வரும் வகையில், அதற்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழர் பிரதேசத்திலும் கூட இதற்கான ஏற்பாடுகளால் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.

5ஆவது தலைமுறை காந்த அலைகள், மானிட வாழ்வுக்கும் ஏனைய விலங்குகள், பறவைகள் வாழ்விற்கும் உகந்தது தானா? இதனால் புற்று நோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என பல்வேறு  கேள்விகளும் உள்ளன. இது பலரையும் பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஐந்தாவது தலைமுறை கட்டமைப்பில் அதற்கான மின்காந்த அலைகளை பரிமாறக் கூடிய கருவிகளை பொருந்தும் பொருட்டு, நகரங்களிலும் கிராமங்களிலும் புதிதாக கம்பங்கள் நடப்படுவது உலகெங்கும் இடம்பெற்று வருகிறது. ஆனால்  பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் கம்பங்களை நடுவது அவரவர் பிரதேசங்களில் உள்ள பிரச்சினையாகும்.

மேற்குறிப்பிட்ட அபாயங்கள் பெரிதாக்கப்பட்டு பொது நலன் விரும்பிகளின் செயற்பாடுகளால் இடையூறுக்கு உள்ளாகி வருகிறது என்பதே இங்கே முக்கிய பார்வையாக இருக்கிறது.

தாயக மண்ணில் எழுந்துள்ள பல்வேறு ஐயப்பாடுகயையும் மனதில் கொண்டு, இது குறித்த தேடுதல்கள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, பிரித்தானியாவில்  RSPB எனப்படும் Royal Society for the Protection of Birds  எனப்படும் அமைப்பு ஐந்தாவது தலைமுறை மின்காந்த அலைகள் குறித்த எந்தவித அறிக்கையும் விடவில்லை என்பது, இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

அதேபோல, மனித உடலுக்கு பாதகமானதா என்ற கேள்வியை அணுகும் வகையில் , உலகிலேயே தனது இனம் அழிந்து போய்விடக் கூடாது என்பதில் முழு கவனமும் கொண்டுள்ள இனமான யூதஇனம் பெரும்பான்மையாக  வாழும் இஸ்ரேலில், ஐந்தாவது தலைமுறை கட்டமைப்ப நடவடிக்கைகள் குறித்து பார்க்கின்ற பொழுது- இஸ்ரேலிய அரசாங்கம் உலகின் அனைத்து நாடுகளுடனும் போட்டி போட்டு, தொலைத்தொடர்பு கட்டமைப்பை கட்டு வித்து கொள்ளும் வகையில், 140 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித்தொகையாக இந்த மின் காந்த அலை பரப்பிகளை அமைக்கும் நிறுவனத்திற்கு வழங்குவதாக உறுதி அழித்திருக்கிறது. இந்த செய்தியை ஜெருசலேம் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் உலகில் மேலை நாடுகள் 5ஜி பாதகமானது என்பது குறித்து பெருமளவில் அலட்டி கொண்டதாக தெரியவில்லை.

அண்மையில் The New York Times பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில், இயற்பியல் (physicist) ஆய்வாளர் ஒருவர், 2000ஆம் ஆண்டளவில் தவறான முறையில் செய்த ஆய்வின் பலனாக காந்த அலைகள் மனித உடலின் உட்புகுந்து பாதிக்கும் என்ற முடிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் பலனாக, இன்று வரை பலரும், அதி உயர் மின்காந்த அலைகள், உடலுக்கு பாதிப்பானது என எண்ணி வருவதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.

சூரியகதிர்கள் எவ்வாறு உடலின் உள்ளே புகுந்த சென்று தாக்கம் விளைவிக்க முடியாத வகையில் உள்ளதோ,  அதேபோல காந்த அலைகளும் தடுக்கப்படும் எமது தோல் எமது உடலை பராமரிக்கிறது  என்ற ஆய்வை பல ஆய்வாளர்கள் நிறுவி உள்ளதாக அந்த  New York Times பத்திரிகை கட்டுரை கூறுகிறது.

லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

Share this post:

Recent Posts