தமிழ் සිංහල English
Breaking News

அக்டோபரில் அறிமுகமாகும் அப்பிள் சாதனம்!

அப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லேப்டாப் தவிர புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இத்துடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

சர்வதேச சந்தையில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ துவக்க விலை 3000 டாலர்கள் முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 16 இன்ச் மாடலில் 3072×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை அப்டேட் செய்து ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கியது.

 

மேக்புக் - கோப்புப்படம்

 

இதைத் தொடர்ந்து அக்டோபரில் அறிமுகமாக இருக்கும் மேக்புக் ஏர் மாடலில் புதிய பிராசஸர்கள், மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

16 இன்ச் மாடலுடன் அறிமுகமாக இருக்கும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலில் ஏற்கனவே இரண்டு தண்டர்போல்ட் 3 போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அப்டேட்களில் 32 ஜி.பி. ரேம் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post:

Recent Posts