தமிழ் සිංහල English
Breaking News

இலங்கையின் தொழிநுட்ப புரட்சி .!

விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கையின் தொழிநுட்ப புரட்சி ‘ஷில்பசேனா’ கண்காட்சி நிகழ்வின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளது.
நாட்டை முன்னேற்றுவதற்கு விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி துறைகளை வலுவூட்டுவதும் அவற்றுக்குத் தேவையான வசதிகளை குறைவின்றி வழங்கவும் வேண்டும்.
விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பாட விதானங்களை உருவாக்கி வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வளிப்பதனூடாக இளைஞர், யுவதிகள் சர்வதேச தொழிற்சந்தையை வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share this post:

Recent Posts