தமிழ் සිංහල English
Breaking News

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டி 26இல்.!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த வகையில், முதலாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 28 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள இலங்கை அணியில், தலைவராக திமுத் கருணாரத்னவும், ஏனைய உறுப்பினர்களாக, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, சேஹான் ஜெயசூரிய, தனஞ்சய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, தசூன் சானக்க, வஹிந்து ஹசரங்க, அகில தனஞ்சய, அமில அபோன்சு, லக்ஷான் சந்தகான், லசித் மலிங்க, நுவான் பிரதீப், கசூன் ராஜித, லஹிரு குமார, திஸர பெரேரா, இசுறு உதான மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Share this post:

Recent Posts