தமிழ் සිංහල English
Breaking News

சம்பந்தரின் தனி நாடு கருத்து தமிழர் நலன் சார்ந்ததல்ல- கஜேந்திரன்!

தமிழீழம் மலர்வதாக இருந்தால் அது மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே மலரும் என்ற சம்பந்தரின் கருத்து தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழம் மலர்வதாக இருந்தால் அது மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே மலரும் என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் எச்சரித்திருந்தார்.

சம்பந்தரின் இக்கருத்து தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சீன சார்பு போக்குடைய ராஜபக்ஷ போன்றவர்கள் நாட்டின் தலைமையை மீண்டும் பொறுப்பேற்றால், வடக்கு- கிழக்கு தனி நாடாக உருவாக்கப்படும் என்ற செய்தியையே சம்பந்தர் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், இக்கருத்து தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல. இந்த நாடு இரண்டாக பிரிந்துவிடக் கூடாது. பௌத்தம் அரச மதம் என்பதற்கு தமிழர்கள் முழு அங்கீகாரம் கொடுத்துள்ள நிலையில், நாடு வீணாக பிளவுபடப் போகிறது என்ற எச்சரிக்கையை இந்திய- மேற்குலக நாடுகளுக்கு வழங்கும் வகையிலேயே அவரது கருத்து அமைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com