தமிழ் සිංහල English
Breaking News

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்..!

போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராத பண சீட்டை சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

போக்குவரத்து கடமைகளில் ஈடுப்படும் காவற்துறையினருக்கு தேசிய செஞ்சிலுவை சங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த முதலுதவி பயிற்சி வழங்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி , விதிமுறைகளை மீறும் சந்தர்பத்தில் அதனை புகைப்படம் எடுத்து அந்த குற்றத்திற்கான அபராதப்பண சீட்டுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com