தமிழ் සිංහල English
Breaking News

புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை குத்த முயற்சித்த நபர் குறித்து வெளிவந்த புது தகவல்..!

விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளரான தயா மாஸ்டர் மீது கத்தியால் குத்த முயற்சித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

“எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் தன்னிடமுள்ள இரகசியங்களை பெற முயற்சித்தனர். என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது. அதை தேவையான போது கைத்தொலைபேசியாக பயன்படுத்துவேன்”. என குறித்த நபர் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

20 வருடங்களுக்கு மேலாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய குறித்த நபர் தற்போது யாழ். பிரதான வீதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்” எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்­துள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கலையகத்துக்குள் திங்கட்கிழமை மாலை ஒருவர் அத்துமீறி நுழைந்து பணியிலிருந்த தயா மாஸ்டரை தாக்கியுள்ளார்.

அவ்வேளை அங்கு கூடிய நிறுவன ஊழியர்கள் அவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போதே குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று பொலிஸாரிடம்வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, அவரை யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, குறித்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com