தமிழ் සිංහල English
Breaking News

தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளது..!

தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்களது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அது மட்டும் இன்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த காலங்களை விடவும் தற்போது தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளதாக கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com