தமிழ் සිංහල English
Breaking News

தூத்துக்குடி – கொழும்பு இடையில் சரக்கு கப்பல் சேவை..!

தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கும் இடையில் சரக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த Regional Container Line எனும் தனியார் நிறுவனம் ஒன்றே இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.

வாரத்தில் இரு முறை சரக்கு கப்பல் சேவை இடம்பெறவுள்ளது. எம்.வி.சார்லி என பெயரிடப்பட்டுள்ள கப்பலே சேவையில் ஈடுபடவுள்ளதுடன், அக்கப்பல் 1730 TEU கொள்ளளவு கொண்டது என கூறப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடி நோக்கிப் பயணிக்கும்.

இந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் தொழில்களுக்கு இந்த சரக்கு கப்பல் சேவை வாய்ப்பளிக்கும் என நம்பப்படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com