தமிழ் සිංහල English
Breaking News

தனது குழந்தையுடன் நியாயம் கேட்ட செய்தி வாசிப்பாளர்..!

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒரு தாயாக எப்படி உணர்கிறேன் என அங்குள்ள டிவி.,ல் பணிபுரியும் பெண் செய்திவாசிப்பாளர் தனது குழந்தையுடன் விவரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் கசூர் பகுதியில் 8 வயது சிறுமி ஷாயினப் கடந்த செவ்வாய்கிழமை பலாத்காரம் செய்யப்பட்டார்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி ஒரு நடுத்தர வயதுமிக்க நபருடன் செல்வது தெரியவந்துள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தான் எப்படி உணர்கிறேன் என்பதை கூறுகிறார். ஸ்டூடியோவுக்கு தனது குழந்தையுடன் வந்த செய்தி வாசிப்பாளர் அரங்கில் குழந்தையை தனது மடியில் வைத்து தனது வேதனையை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com