தமிழ் සිංහල English
Breaking News

ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டில்..!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு வீர தமிழச்சியாக கலந்து கொண்டவர் ஜூலி, இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளியாகவும் அறிமுகமானார், அதுமட்டுமில்லாமல் விமலுடன் மன்னார் வகையறா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கும் படத்தில் ஜூலி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வைரலாகின.

இதனையடுத்து தற்போது இந்த படத்திற்கு உத்தமி என டைட்டில் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தளபதி-62 படத்திலும் ஜூலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருந்தன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com