தமிழ் සිංහල English
Breaking News

சவுதியில் தமிழக மீனவருக்கு நேர்ந்த துயரம்..!

சவுதி அரேபியாவில் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தமிழக மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையை சேர்ந்த 3 மீனவர்கள் பக்ரின் நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்களது படகுகள் சவுதி அரேபியா கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மோதி விபத்துகுள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மரிய பீச்சை என்ற மீனவர் கடலில் முழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் உடன் சென்ற 2 மீனவர்களை எல்லைதாண்டியதாக சவுதி அரேபிய நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்த மீனவர் உடலையும், கைதானவர்களையும் அரசு மீட்டு தாயகம் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com