தமிழ் සිංහල English
Breaking News

கர்பமான மானை வேட்டையாடிய இருவர்..!

கருவலகஸ்வௌ பகுதியில் மான் ஒன்றினை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றிரவு மான் வேட்டைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஓட முடியாத நிலையில் கர்பமுற்றிருந்த மான் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொன்றுள்ளனர்.

வேட்டையாடிய குறித்த மானினை இறைச்சியாக பொதி செய்து உந்துருளியில் எடுத்து சென்ற வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மான் இறைச்சி, மானினை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட பல பொருட்களை வன ஜுவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com