தமிழ் සිංහල English
Breaking News

இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோள் கார்ட்டோசாட்-2..!

இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று காலை 9:28 மணிக்கு (வெள்ளி), பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்தவகையில் தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் ‘கார்ட்டோசாட்-2′ உட்பட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த ‘இஸ்ரோ’ முடிவெடுத்தது.

மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்து, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-40 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com