தமிழ் සිංහල English
Breaking News

அமெரிக்காவில் முதல்முறையாக இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு..!

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டாமுரி என்ற நபருக்கு கொலைக் குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 32 வயதான ரகுநந்தன் யண்டாமுரிக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரகுநந்தன் H1B விசாவில் அமெரிக்கா சென்று, பென்சில்வேனியா மாகாணத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் அவருடைய 10 மாத பேத்தியை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ரகுநந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி அவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தனது மரண தண்டனையை எதிர்த்து ரகுநந்தன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தார். ஆனால் அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி ரகுநந்தனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பென்சில்வேனியா நீதிமன்றம் நாள் குறித்துள்ளது.

பெப்ரவரி 23ஆம் திகதி விஷஊசி மூலம் ரகுநந்தனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு முதல், மரண தண்டனையை நிறைவேற்ற, பென்சில்வேனியா கவர்னர், தற்காலிகத் தடை விதித்திருந்தார். இதன் அடிப்படையில், ரகுநந்தனின் தண்டணை நிறுத்தி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com