தமிழ் සිංහල English
Breaking News

ரணிலின் ஆட்சியில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு..!

முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையானது 2000 ஆண்டுகளில் வெறுமனே ஒரு கரையோர மாவட்ட கோரிக்கையாக தேய்ந்து போனது. நிலத் தொடர்பற்ற வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய பிரதேசங்களை திகாமடுல்ல மாவட்டத்தோடு அதனோடு இணைத்து கொள்வது பற்றிய சிந்தனைகள் சிக்கலானதாகவே இருந்து வந்துள்ளது.

அதற்கான விவாதங்களும் முன்னர் சொன்னது போலவே அவ் வப்பொழுது இடம் பெற்று வந்தன. ஆனாலும் நடைமுறையில் நிலத் தொடர்பற்ற பகுதிகளை இணைப்பது , மட்டக்களப்பு மாவட்டத்து முஸ்லிம்களையும் , திகாமடுல்ல மாவட்ட தமிழர்களையும் பரஸ்பர இடமாற்றம் செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது. முஸ்லிம்களின் தீர்வு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஒரு பக்க மேளமாகமாவே ஒலித்தது.

1990 களின் பின்னரான முஸ்லிம் அரசியல் பரிமாணம் என்பது வடக்கு கிழக்கிலே மிக அதிக விலை கொடுத்து பெறப்பட்டதாகும். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமும் கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைகளும் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்குரிய ஒன்றாக மாறியது . ஆனால் அரசியல் ரீதியில் முஸ்லிம்களால் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுகளில் போதிய செல்வாக்கு செலுத்த முடியவில்லை.

இலங்கை அரசும் புலிகளுடன் அல்லது தமிழ் தரப்பு அரசியல் சக்திகளுடன் தீர்வு காண முற்பட்டனரே ஒழிய முஸ்லிம்களை ஒரு அக்கறையுள்ள தரப்பினராக கருதிச் செயற்பட முன் வரவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை புலிகளோ தமிழ் தரப்பினோ முஸ்லிம்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இந்த நிலைமை இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கி இறுதி நோர்வே ஒப்பந்தம் வரை நீடித்தது.

நோர்வே ஒப்பந்தத்திலும் , சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பு அமைப்பிலும் கூட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரசானது அதன் உருவாக்கப்பட்ட நோக்கத்தை கைவிட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை தகுந்த முறையிலும் சரியான தருணங்களிலும் முன் வைக்க முடியாது போனது.

அதிலும் குறிப்பாக 1994 களின் பின்னர் மிக நீண்டகாலம் இலங்கை அரசின் பங்காளிகளாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்த பொழுதும் அவர்களால் பாரிய அரசியல் வெற்றியைப் பெற முடியவில்லை என்பது மிகவும் விசனத்துக்குரிய உண்மையாயாகும்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (5)

எஸ்.எம்.எம்.பஷீர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com