தமிழ் සිංහල English
Breaking News

மீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது!

முன்னைய அரச தலைவர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியும் அது மக்களிடம் எடுபடாமல் போன நிலையில், அரசுக்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு அடக்குமுறையைத் தவிர அரசுக்கு வேறு தெரிவுகள் இல்லாத நிலை எழுந்துள்ளது. அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதன் காரணமாக, அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டினுள்ளும் பிளவு உருவாகியுள்ளதுடன், அதன் காரணமாக பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பாரிய பிளவுகளும் தோன்றியுள்ளன.

அதுமட்டுமின்றி, இந்த ஏகாதிபத்திய சார்பு அரசை பதவிக்குக் கொண்டு வருவதிலும், அதைத் தொடர்ந்து ஆதரிப்பதிலும் பங்கு வகிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பனவற்றினுள்ளும் பிளவுகள் தோன்றியுள்ளன. ஆட்சி அதிகாரப் பிடியை படிப்படியாக இழந்துவரும் இன்றைய அரசின் தலைவர்கள், “எங்களை யாரும் உசுப்ப முடியாது. 5 வருடங்களும் பதவியில் இருந்தே தீருவோம்” என அடிக்கடி பிதற்றும் வகையில் பயபீதியால் பிடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

தற்போதைய மைத்திரி – ரணில் அரசு இலங்கையை எரிமலையின் வாயிலில் வைத்துள்ளது. எரிமலை குமுறும்போது நாடு ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த அபாயத்திலிருந்து நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதானால், மக்களுக்குச் சார்பான ஆட்சி மாற்றம் ஒன்று தேவை. அதற்கு மக்கள் சக்தியைத் திரட்டுவது அவசியமானது.

மக்களை அணிதிரட்டி, பொய் வாக்குறுதிகளைச் சொல்லி பதிவிக்கு வந்த இந்த அரசை பதவி விலகுமாறு கோரி வற்புறுத்தும் பரந்துபட்ட இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பது அவசியமானது.
அவ்வாறான ஒரு மக்கள் இயக்கத்தின் மூலம் இந்த மக்கள் அரசைப்பதவி விலக வைத்து, புதிய தேர்தல் ஒன்றை நடாத்தி மக்கள் விரும்பும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசொன்றைப் பதவிக்குக் கொண்டு வருவதே நாடு எதிர்நோக்கும் அபாயகரமான நிலைமையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாகும்

 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com