தமிழ் සිංහල English
Breaking News

இலங்கையை ஆளும் சீனா..!

தற்போதைய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக கடந்தகால அரசு பின்பற்றியிருந்த அதீத சீன சார்பு கொள்கையை விமர்சித்தே வந்திருந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், கொழும்புத் துறைமுக நகர் நிர்மாணங்களை நிறுத்துவோம் என்றது. தாமரைக் கோபரத்தை நிறுத்துவோம் என்றது. அம்பாந்தோட்டையை மகிந்த அரசு சீனாவுக்கு விற்கப் போகிறது. அதனை நிறுத்துவோம் என்றது. ஆனால், இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்படி அனைத்தும் சீனாவிற்கே கொடுக்கப்பட்டுவிட்டது மட்டுமல்லாது தற்போது இலங்கையிலள்ள சீன தூதரகம் கூறுகின்றபடியெல்லாம் நடந்து கொள்ளவும் இந்த அரசு தயாராகிவிட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது.

அந்த வகையில், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு சிகரெட் வகைகளை இறக்குமதி செங்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீன நாட்டு சிகரெட் வகைகளை இலங்கையில் விற்பனை செய்யும் நோக்கில் சீன தூதரகம் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த ஏற்பாடு நடந்துள்ளதாக தற்போது நிதி அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com