தமிழ் සිංහල English
Breaking News

வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் புறக்கணிப்பா?

காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று மற்றும் மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றதொரு நிலையில் இவை தொடர்பிலான முன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலேயே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருவதுடன் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடமே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

வளிமண்டளவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. ‘வளிமண்டலவியல்திணைக்களம் – இலங்கை’ என்ற தமிழ் மொழியிலான தலைப்பே எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவதுடன் தொடர் பயன்பாடு இன்றியும் முன்னறிவித்தல்கள் இன்றியுமே காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தில் இத்தகைய நிலைமை ஏற்பட தமிழ் தெரிந்த அதிகாரிகள் இன்மையே காரணம் எனக் கூறப்படுகின்றது.

அதாவது இத்திணைக்களத்திற்கு குறைந்தபட்சம் தமிழ் தெரிந்த அதிகாரிகள் 4 பேராவது இருக்க வேண்டிய நிலையில், குறிப்பிட்ட கடமைக்காக ஒருவருமே இல்லை என்றே தெரியவருகின்றது.

இத்தகைய நிலையினை மாற்றும் வகையில் வளிமண்டளவியல் திணைக்களத்திற்கு போதிய தமிழ் அதிகாரிகளை நியிமிப்பதற்கும், தமிழ் மொழி மூலமாக காலநிலைமாற்றங்கள் தொடர்பில் உடனுக்குடன் முன்னறிவித்தல்களை வழங்குவதற்கும் மேற்படித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்தினை முறையாக செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழப்பியுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com