தமிழ் සිංහල English
Breaking News

மகிந்த அணியின் ஒத்துழைப்பு தேவையில்லை..!

மகிந்த அணியின் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த அணியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமையால் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்தலில் தாம் வெற்றிபெறுவதாகவும், சிறந்த வேட்பாளர்கள், உள்ளதாகவும், வரலாறு தொடர்பில் நல்ல நினைவு இருப்பதால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கட்சியை விட்டுச் செல்ல மாட்டார்கள் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் இளைஞர் அனித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினால் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

93 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சாந்த பண்டார கூறியுள்ளார்.

இதேவேளை, மொனராகலை பிரதேசத்தின் பிபில பிரதேச செயலகப் பிரிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நேற்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தலைமையில் இந்தக் கட்டுப்பணத்தை செலுத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com