தமிழ் සිංහල English
Breaking News

தொடரூந்து இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பால் பயணிகள் பெரும் அசௌகரியத்தில் ..!

தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால், பெருமளவான பயணிகள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக சுமார் 150 அன்றாட தொடரூந்து சேவைகளை இரத்துச் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என தொடரூந்து கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றுள் பெரும்பாலானவை தூர பயண சேவைகளாகும்.

தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர்களை முறைமைக்கு புறம்பாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரூந்து இயந்திர சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடரூந்து இயந்திர சாரதிகளின் கோரிக்கை தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் பேச்சவார்த்தை ஒன்று இடம்பெறுகிறது.

அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே மற்றும் தொடரூந்து முகாமையாளர் மஹநாம அபேவிக்கிரம உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சவார்த்தையில் தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக அதன் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொடரூந்து இயந்திர பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com