தமிழ் සිංහල English
Breaking News

அடங்கிக் கிடந்த விக்னேஸ்வரன் தற்போது சுறுசுறுப்பாகி விட்டார்..!

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அடங்கிக் கிடந்த வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், புதிய ஆட்சியில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிப்பதாக முன்னாள் கடற்படைத் தளபதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான எலிய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அடங்கிக் கிடந்த வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் புதிய ஆட்சியில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி, தனது பதவியையும் அதிகாரத்தையும் வைத்து நாட்டுக்குப் பொருந்தாத சட்ட மூலங்களை இயற்றிக்கொள்ளவும் அவர் முயற்சிக்கிறார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த வேண்டும்.

மேலும், அரசு முன்வைத்த ஒரு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த ஒரே எதிர்க்கட்சி உலகிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் இருக்கும்.

அதனால் தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னகர்த்தினால் தற்போதைய அரசும் அதை அங்கீகரிக்கும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com