தமிழ் සිංහල English
Breaking News

மணமணக்கும் நாய் பிரியாணி: கலக்கத்தில் பிரியாணி பிரியர்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள பிரியாணி கடைகளில் ஆட்டு கறியுடன் நாய் கறி கலப்படம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது ‘பிரியாணி’ தான்.

அப்படி பிரியாணிக்கென்றே புகழ்பெற்ற ஆம்பூரில் தள்ளுவண்டி கடைகளும் அதிகம். அந்த கடைகளில் சாப்பிடுவோரின் வாயை பார்த்துக்கொண்டு நிற்கும் தெரு நாய்களும் அதிகம்.

ஆம்பூர் பகுதியில் அசைவம் சார்ந்த சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் அதிகமாக இருந்தாலும், கூட்டம் மட்டும் எப்போதும் நிரம்பி வழிந்துகொண்டே இருக்கும்.

மாலை நேர தள்ளுவண்டி கடைகளில் 60,70 ரூபாய்க்கெல்லாம் சுட சுட மட்டன் பிரியாணி வழங்கப்படுவதால் இதற்கு தனி மவுசு இருந்துவந்தது. இவ்வளவு குறைவான விலையில் மட்டன் பிரியாணி வழங்குவது சாத்தியமில்லை என தெரிந்தாலும், மாட்டு கறியை தானே கலப்படம் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளூர்வாசிகளும் அதிகளவில் சாப்பிட்டு வந்தனர்.

ஆனால் இப்போதுதான் தெரிகிறது ஆட்டு கறியுடன், நாய் கறியையும் கலந்து வந்துள்ளனர் என்று, கறியின் வித்தியாசம் தெரிந்துவிடாமல் இருக்க அஜினமோட்டோவையும் புதினா சாற்றையும் அதிக அளவில் கலந்து விடுகிறார்கள்.

அத்துடன் சுடச்சுட பிரியாணி கிடைப்பதால், கறி குறித்த சிந்தனையே மறைந்துவிடும். மேலும், இப்படியான கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் போதை ஆசாமிகள் என்பதால், கடைக்காரர்களுக்கு ரொம்பவும் வசதியாகப்போய்விட்டது” என்கிறார்கள் உள்ளூர் விவரம் அறிந்தவர்கள்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com