தமிழ் සිංහල English
Breaking News

தாக்குதலுக்கு தயாராகும் 26,000 ஐ.எஸ் பயங்கரவாதிகள்…..!!!!!!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடும் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில் 26,000 ஆதரவாளர்களை திரட்டி முக்கிய ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் திட்டம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கண்காணிப்பு பட்டியலில் உள்ள சில ஐ.எஸ் பயங்கரவாதிகள் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் எல்லையை ஊடுருவ முயற்சித்து பிடிபட்ட நிலையில் குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட Colonel Ryan Dillon, இதுவரை 26,000 ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டத்துடன் களமிறங்கியுள்ளதை தம்மால் உறுதிபடுத்த முடியும் எனவும், ஆனால் அவர்களை இனம்காணும் பணி மிகவும் கடுமையானது எனவும் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து புறப்பட்டிருக்கும் இவர்கள் உலக நாடுகள் பலவற்றிலும் தாக்குதல் நடத்தும் திட்டம் வைத்துள்ளதாகவும், முக்கியமாக பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் முதல் இலக்காக அமையலாம் எனவும் டில்லன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ் படைகளின் வீழ்ச்சி என்பது உண்மையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முடிவு அல்ல எனவும், அவர்கள் உலகின் முக்கிய நாடுகளில் ஏற்கெனவே ஊடுருவி தங்கள் இருப்பை தக்கவைத்து கொண்டுள்ளனர் எனவும்,

அந்தந்த நாடுகளின் உளவு அமைப்புகளே உரிய நடவடிக்கை மேற்கொண்டு சதி திட்டங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் தங்கள் ஆதிக்கத்தை தொலைத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் இனிமேல் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை முன்னெடுக்கலாம் எனவும், இந்த ஆண்டில் மட்டும் சில நூறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஐரோப்பாவில் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் தகுந்த வாய்ப்பினை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் மட்டும் சுமார் 3,000 ஐ.எஸ் பயங்கரவாதிகள் எஞ்சியுள்ளதாகவும், இதே எண்ணிக்கையில் ஈராக் மற்றும் லிபியாவில் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com