தமிழ் සිංහල English
Breaking News

தளபதி விஜயிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை – பிரபல நடிகர் அதிரடி பேட்டி

தளபதி விஜய் யாருடைய படங்களாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் அவர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முன்னிலை வகித்து வருகிறார், இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி இருந்த ப்ரேமம் படத்தையும் பாராட்டியுள்ளார்.

இதனை பற்றி நிவின் பாலி அவரது நடிப்பில் உருவாகி உள்ள நேரடி தமிழ் படமான ரிச்சி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இது பற்றியும் தளபதி விஜய் பற்றியும் பேசியுள்ளார்.

நிவின் பாலி கூறியுள்ளதாவது, என்னுடைய நடிப்பில் வெளியாகி இருந்த ப்ரேமம் படம் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது, இதனால் அவர் படத்தை பார்த்த உடனே எனக்கு போன் செய்து வாழ்த்துகளை கூறினார், அவரிடம் இருந்து அப்படியொரு சர்ப்ரைஸை எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் விஜய் தன்னை அவரது இடத்திற்கு அழைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியது மட்டுமல்லாமல் தன்னுடன் கிட்டத்தட்ட 20-30 நிமிடங்கள் பேசியதாகவும் கூறியுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com