தமிழ் සිංහල English
Breaking News

இளநரை, வழுக்கைத்தலை இருந்தால்..?

ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஆனதும் உடல் பருமனால் பல உடல்நலக் குறைபாடுகளை சந்திக்கக் கூடும்.

அதுவும் ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இளநரை அல்லது வழுக்கை தலை விழுந்த ஆண்களுக்கு 32 சதவீதம் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதய நோய் வருவதற்கு இதுமட்டுமில்லாமல், அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற மற்ற காரணங்களும் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதயநோயை தடுக்க என்ன செய்யலாம்?
  • ஒருநாளைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை ஐந்து பகுதிகளாக சாப்பிட வேண்டும்.
  • மது மற்றும் புகைப் பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
  • உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தினசரி சாப்பிடும் உணவில் அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • உணவில் உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மீன்களை உணவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com