தமிழ் සිංහල English
Breaking News

கொழும்பு நீரில் மூழ்கும் அபாயம் ..!

இன்று நிலவும் கடும் மழையுடன் கூடிய புயலின் வேகம் காரணமாக இலங்கை முழுவதும் பெரிய சிரமத்தினை எதிர்நோக்கவிருப்பதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை செய்துள்ளது. குறிப்பாக கொழும்பு நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக வானிலை அவதான மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மாத்திரம் அன்றி இலங்கையினை சுற்றியுள்ள நாடுகளும் கடும் மழை காரணமாக பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அனர்த்த நிலைமை ஏற்படட்டால் 117இற்கு அறிவிக்கவும்

மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு, வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்து வருவதை அடுத்தே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடற்படையினரும் கடலுக்குச் செல்லும் போது கூடிய அவதானத்துடன் இருக்கவேண்டுமென்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை, சில நாட்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, தெற்குக்கான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக, ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று வீசிய கடும் காற்றுக் காரணமாக காலி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அங்கு மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால், சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

காலநிலையால் ஏதேனும் அனர்த்திற்கும் இலக்காகியிருந்தால் உடனடியாக 117 என்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அறவிக்கவும்.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்திற்கான அபாய நிலைமைகள் காணப்படுமாக இருந்தால் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com