தமிழ் සිංහල English
Breaking News

அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகளிலிருந்து விலகிக் கொள்வது நியாயமற்றது..!

அரசியல் அமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து விலகிக் கொள்வது நியாயமற்றது என கண்டி அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, அஸ்கிரி பீடாதிபதியை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டுக்கு பொருத்தமான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக பரிந்துரைகள், ஆலோசனைகளை முன்வைக்காது அரசியல் அமைப்புச் சபையிலிருந்து விலகிக் கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டுக்கு பாதகமான விடயங்கள் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதற்கு அரசியல் அமைப்புச் சபையில் அங்கம் வகிப்பது அவசியமாகின்றது.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் வெளியில் இருந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதில் எவ்வித பயனும் கிடையாது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது.

அதனைவிடுத்து, அரசியல் அiமைப்புச் சபையிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானிப்பது பொருத்தமான தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com