தமிழ் සිංහල English
Breaking News

முஸ்லிம் காங்கிரசுக்கு ஹ‌க்கீம் தலைவராக இருப்பது க‌வ‌லை தருகிற‌து…!

வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைப்ப‌தை க‌வ‌லை தருகிற‌து. எதிர்க்கிற‌து என‌ சொல்ல‌ முடியாது என‌ தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியொன்றில் பேசிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூஃப் ஹ‌க்கீம் தெரிவித்த‌த‌ன் மூல‌ம் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைப்ப‌த‌ற்கான‌ சூழ்ச்சியில் ஹ‌க்கீம் விலை போய் விட்டார் என்ற‌ எம‌து க‌ருத்து ஊர்ஜித‌மாகி விட்ட‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

க‌ட்சிக்காரியால‌ய‌த்தில் ந‌டைபெற்ற‌ ம‌க்க‌ள் ச‌ந்திப்பின் போது அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைய‌க்கூடாது என‌  அ. இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் நேர‌டியாக‌ சொல்லும் போது நீங்க‌ளும் அப்ப‌டி சொல்கிறீர்க‌ளா என‌ ஊட‌க‌விய‌லாள‌ர் கேட்ட‌ போது அவ்வாறு நாம் சொல்ல‌ முடியாது என்று சொன்ன‌ ஹ‌க்கீம் அத‌ற்குரிய‌ கார‌ண‌த்தை சொல்லாம‌ல் வ‌ழ‌மை போன்று சுற்றோ சுற்று என‌ சுற்றிக்கொண்டிருந்தார்.  அத்துட‌ன் வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு த‌மிழ் ம‌க்க‌ளின் அபிலாஷை என்றார். இத‌ற்கு குறுக்காக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் நிற்காது என்றும் கூறினார். அப்ப‌டியானால் முஸ்லிம்களின் அபிலாஷைக‌ள் என்ன‌ என‌ கேட்க‌ப்ப‌ட்ட‌ போது அத‌ற்கும் ஹ‌க்கீம் ப‌தில் த‌ராம‌ல் மீண்டும் சுற்ற‌ ஆர‌ம்பித்து விட்டார்.

வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் அபிலாஷை  என்ப‌து வ‌ட‌க்கும் கிழ‌க்கு மீண்டும் இணைய‌க்கூடாது என்ப‌தும் மூவின‌ ம‌க்க‌ளும் சம பலத்துடன் வாழும்  சுத‌ந்திர‌மான‌  கிழ‌க்கு என்ப‌துமாகும் என்ப‌து கூட‌ தெரியாத‌ ஒரு முஸ்லிம் க‌ட்சித்த‌லைவ‌ராக‌ ஹ‌க்கீம் இருப்ப‌து க‌வ‌லை தருகிற‌து.

வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைப்ப‌தாயின் பாராளும‌ன்ற‌த்தில் மூன்றில் இர‌ண்டு கிடைக்குமா? சிங்க‌ள‌ எம் பீக்க‌ள் ஆத‌ர‌வ‌ளிப்பார்க‌ளா என்றெல்லாம் ஹ‌க்கீம் சொல்லியுள்ளார்.

வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைப்ப‌தால் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு  பெரிதாக‌ பாத‌‌க‌ங்க‌ள் இல்லை. மத்தியில் சிங்க‌ள‌வ‌ர் ஆட்சி என்ப‌தால் த‌ம‌க்குரிய‌தை பெற‌ அவ‌ர்க‌ளால் முடியும். ஆனால் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்குத்தான் பாரிய‌ ஆப‌த்து என்ப‌து புரியாத‌ க‌ட்சியாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் உள்ள‌து. அத்துடன் பாராளும‌ன்றத்தில் மூன்றில் இர‌ண்டு எடுப்ப‌து பெரிய‌ விட‌ய‌ம் அல்ல‌.

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு  ஆளுக்கு இர‌ண்டு கோடி கொடுத்தால் கிடைத்த‌து புண்ணிய‌ம் என‌ கையை உய‌ர்த்திவிட்டு போவ‌ர் என்ப‌தை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌‌ளில் நாம் காண‌வில்லையா?

கோடிக‌ளை பெற்றுக்கொண்டு முஸ்லிம்க‌ளுக்கு விரோத‌மான‌ ச‌ஈ

Share this post:

Recent Posts