தமிழ் සිංහල English
Breaking News

தாமதமாகும் மாகாணசபைத் தேர்தல்கள்; நியாப்படுத்தும் அரசாங்கம்!

rajitha

அடுத்த ஆண்டு ஜன­வரி 20ஆம் திக­திக்கு முன்னர் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும். அதன் பின்­னரே மாகா­ண­சபை தேர்தல் நடத்­த­ப்ப­டு­வது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும். இரண்டு தேர்­தல்­க­ளையும் ஒரே சந்­தர்ப்­பத் தில் நடத்த இய­லாது என அர­சாங்கம் தெரி­வித்தது. மாகா­ண­சபை தேர்தல் தள்­ளிப்­போ­வதை தவிர்க்க முடி­யாது. அனைத்து மாகா­ண­சபை தேர்­தல்­க­ளையும் ஒரே தட­வையில் நடத்­து­வது குறித்தே ஆரா­ய­வேண்டும் எனவும் அர­சாங்கம் குறிப்­பிட்­டது.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளர்­க­ளான ராஜித்த சேனா­ரட்ன மற்றும் தயா­சிறி ஜய­சே­கர ஆகியோர் இதனை தெரி­வித்­தனர்.

அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் நிறை­வேற்­றப்­பட்­டது 20 ஆம் திருத்­தச்­சட்டம் அல்ல. இது மாகா­ண­சபை தேர்தல் திருத்த சட்­ட­மூ­ல­மாகும். மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வையை கொண்டே நாம் இதனை நிறை­வேற்­றினோம். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­ட­மூலம் இரண்டாம் மூன்றாம் வாக்­கெ­டுப்பில் நிறை­வேற்­றப்­பட்­டது.

இதில் குறிப்­பாக பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் உள்­ள­டக்­கப்­ப­டு­வது குறித்தே கவனம் செலுத்­தப்­பட்­டது. இதற்கே மஹிந்த அணி­யினர் எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் இதை 20 ஆம் திருத்த சட்டம் என கரு­தி­யுள்­ளனர். அவ்­வாறு கருத வேண்டாம். மேலும் மாகா­ண­சபை தேர்­தல்­களை ஒரே தட­வையில் நடத்­து­வதா இல்­லையா என்­பது குறித்து ஆரா­யப்­பட வேண்டும். இப்­போது சப்­ர­க­முவ மாகா­ண­சபை கலைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வாரத்தில் கிழக்கும் அதன் பின்னர் வட­மத்­திய மாகா­ண­ச­பையும் கலைக்­கப்­படும்.

அர­சாங்கம் விரைவில் இது குறித்த தீர்­மானம் எடுக்கும். மேலும் மாந­க­ர­சபை, நக­சபை , பிர­தேச சபை சட்ட திருத்­தங்கள் ஒக்­டோபர் மாதம் 19 ஆம் திகதி பார­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள என்றார்.

அமைச்­ச­ரவை இணைப் பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பி­டு­கையில்,

தேர்தல் திருத்­தத்தில் பிர­தான இரண்டு கட்­சி­களின் நலன்­களை மாத்­திரம் கவ­னத்தில் கொள்ள முடி­யாது. சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­க­ளையும் கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு வாய்ப்­பு­களை கொடுத்து அவர்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் உள்­வாங்க வேண்டும்.

அதுவே ஜன­நா­யக செயற்­பா­டாகும். மாறாக பிர­தான இரண்டு கட்­சி­களின் விருப்­பத்­திற்கு அமைய செயற்­ப­டு­வ­தாயின் அதுவே நாட்டில் பாரிய குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் கார­ணி­யா­கி­விடும். தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்­களை பிர­தி­நி­தித்­து­வ­ப­டுத்தும் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்தில் உள்­ளனர். ஆகவே அதற்­க­மை­யவே நாம் செயற்­பட வேண்டும்.

மேலும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகா­ண­சபை தேர்­தலை நடத்த முன்னர் முரண்­பா­டுகள் அனைத்­தையும் நிவர்த்­தி­செய்ய வேண்டும். தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தொடர்ச்­சி­யாக இதனை வலி­யு­றுத்தி வந்தார். அதற்­க­மைய நாம் எல்லை நிர்­ண­யங்கள் உள்­ளிட்ட பிர­தான பிரச்­சி­னை­களை கருத்தில் கொண்டு அவற்றை சரி­செய்­துள்ளோம்.

மாகா­ண­சபை தேர்­த­லிலும் பல்­வேறு குழப்­பங்கள் இருந்த நிலையில் அவை தொடர்­பிலும் சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகா­ண­சபை தேர்தல் ஆகிய இரண்­டையும் நடத்த வேண்டும். ஆயினும் ஒரே தட­வையில் இரண்டு தேர்­தல்­களை நடத்­து­வது இய­லாத காரி­ய­மாகும்.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை முதலில் நடத்­து­வ­தற்கே தேர்­தல்கள் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­யெ­டுத்து வரு­கின்­றது. ஜன­வரி 20ஆம் திக­திக்கு முன்னர் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தலை நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த தேர்தலுக்கு பின்னரே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடக்கும்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை தொகுதிவாரியாக நடத்த வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் மாகாணசபை தேர்தல் தள்ளிப்போவதை தவிர்க்க முடியாது என்றார்.

Share this post:

Recent Posts